Apr 28, 2011

"காதல்"



என் வாழ்க்கை பயணத்தின்
ஏதோ ஒரு மூலையில் மூச்சு
விட்டு கொண்டு இருப்பேன்........!

உன் நினைவுகள்
எனக்கு உயிர் வழங்கி
கொண்டு இருக்கும்......!

உன் மகன் வளர்ந்து
ஒரு நாள் உன்னிடம் கேட்க கூடும்
'அம்மா'..! "காதல்" என்பது தீவிரமானதா..? என்று
அன்றைக்காவது என் நினைவு உனக்கு வந்தால்
அழைத்து வந்து காட்டு என்னை.....!!!

பிறகு சொல்
"இவனும் ஒரு காதல் தீவிரவாதிதான்"
"இன்னமும் என்னை நேசித்துக்கொண்டு இருக்கிறான்"
"கிடைக்காது என்று தெரிந்த போதும்"...!?!"என்று.

உன் மகன் என்னிடம் கேட்க கூடும்
"காதல் வலிக்கிறதா என்று..?
நிச்சயமாய் உன் சமயோசித முடிவை பற்றி
ஏதுவும் சொல்ல மாட்டேன்....!
சொல்லுவேன் "காதல் வலிக்கவில்லை".
ஆனால் "காதல் வலியது" என்று......!

நீ போன பிறகு
உன் உடைந்த ஒற்றை
வளையலை தழுவியபடி
உயிர் விடுவேன்
நீ போன வழி பார்த்த படியே.......!!!    -*சௌந்தர்*

2 comments:

  1. உன் ஒரு பார்வையால்
    உயிர் பெற்ற என் தேகம்
    உன் மெளனத்தால்
    உயிர்துறக்கும்
    என்பதை அறியாயோ?

    ReplyDelete
  2. //நீ போன பிறகு
    உன் உடைந்த ஒற்றை
    வளையலை தழுவியபடி
    உயிர் விடுவேன்
    நீ போன வழி பார்த்த படியே.//

    மூச்சு நின்னுடும் போல இருக்கு சௌந்தர் இதை படிக்கும் போது .

    ReplyDelete