May 2, 2011

மழை துளி


மழை நீரில் விளையாட
சிறுபிள்ளைய நீ...?
என்று ஏளனம் செய்த
நண்பர்களுக்கு ஒரு
சிறு புன்னகையை பதிலாக்கி
மீண்டும் தொடருகிறேன்.......!!!

மழை துளியில்
உன் முகம் தேடுவதை......!!!    -*சௌந்தர்*

May 1, 2011

தோற்றுபார்


தோற்றுபார்....!!!
உளி உன் மீது படும்போது
நீ கல்லாக இருக்க நேரிடின்
சிதைந்து சிதைந்தே
சிற்பமாகியிருப்பாய்.......!     -*சௌந்தர்*