Jan 31, 2011

"சிற்பமாய் நீயே"


காதலியே..!!!
உன் காதல்
வேறொருவனுடன் என்றாய்.....!

என்
இதயத்தை
கல்லாய் ஆக்கினேன்.....!

அதிலும் "சிற்பமாய் நீயே"......!      -*சௌந்தர்*

அவள் உருவம்....!


என்
இதயத்தை
எக்ஸ்ரே எடுத்தேன்.......!?!

நிழலாய்
"அவள்" உருவம்.......!  -*சௌந்தர்*

"காதல்"


உன் கண்கள்
அழகென்றதற்க்கு
அலட்சியமாக
பார்த்துவிட்டு போகிறாய்......!

உன்
கண்களுக்கு
தெரியுமா......!?!

உன்
கண்ணை
அழகாக்கிறது.!
என் "காதல்" தான் என்று......!!!      -*சௌந்தர்*

Jan 30, 2011

பிச்சைப்பாத்திரம்


அம்மா
அகிலமெங்கும் தேடுகிறேனடி
அருகினில் நீயின்றி.........!

ஆருயிரே என்றழைக்க வேண்டியவளே
ஓருயிராய் தள்ளிவிட்டு
எங்கே சென்றாய்........!

ஆயிரம் ஜாதிகளுக்கு நடுவில்
ஏனடி விதைத்து விட்டாய்-எந்தனை
அநாதை என்ற புதுஜாதியாய்.....!?!

பிளாட்பார வாகன சப்தங்கள்
தாயின் தாலாட்டாக மாறியது
என் அகராதியில் தானோ.....?!?

என்னை வளர்த்திட
மாடி வீடுதான் இல்லை
உன் மடியிலுமா இடமில்லை.......!

குப்பை தொட்டியில் போட்ட நீ
என் குரல்வளையை அறுத்து
போட்டிருக்காலமடி........!

காகித குப்பைக்குள் விட்ட நீ
என்னுள் கள்ளிப்பாலை சற்றே
விட்டிருக்கலாமடி.......!

அம்மா
என்றதும் சில்லறை ததும்ப சிரிக்கும்
தாய்மாரை காண்கிறேன்......!

நானும் கூவியனழக்கின்றேன்
அம்மா என் அம்மாவென்று சில்லறை ததும்ப சிரிப்பது
நீயல்ல என் கை "பிச்சைப்பாத்திரம்".......!      -*சௌந்தர்*