Feb 9, 2011

தீர்ப்பெழுது


நீ
தீர்ப்பெழுது
குற்றவாளி என்று......!
இதய சிறைக்குள்
இடு சந்தோசப்படுகிறேன்....!

மாறாக விடுதலை
செய்து மட்டும் வெளியேற்றி
விடாதே வேதனைப் படுவேன்.......!

பார்வை தோட்டாக்களால்
சல்லடையக்கு சந்தோசப்படுகிறேன்......!
ஆயிரம் கண்கொண்டு
உன் அழகை ரசிக்க
அதுதானே அற்புத வாய்ப்பு.......!

காதலுக்கு குறுக்கே
நிற்பது எம்மதமானாலும்
எதிர்க்கத் தயார்.....!
உன் சம்மதம் மட்டுமே
சண்டித்தனம் செய்கிறது........!

உன்னைப் பற்றி
எழும் எண்ணங்களை
எவ்வளவு தான் ஆழப் புதைத்தாலும்
தண்ணீரில் அழுத்திய பந்தை தானே
மேலெழுந்து வருகிறது......!

ஓ....!
நான் இன்பக் கடலில் மிதப்பது
எப்படி என்று இப்போது புரிகிறது.......!

உன் எண்ணங்களுக்கே
இப்படி உன்னத வலிமை இருக்கிறதென்றால்
உன் கை பற்றினால் எப்படி இருக்கும்.......!

தூக்கு என்று தீர்ப்பெழுதினாலும்
கைக்கொடுத்து தூக்குவாய்
என நம்பியே காத்திருப்பேன் உனக்காக........!    -*சௌந்தர்*

"மழைக் கண்ணீர்"


பருவத்தின்
ஏக்கமாய் கொட்டித்
தீர்த்தாலும் முடிவாகாத
முதிர்கன்னியின் கண்களாய்
தேம்பிக் கொண்டிருக்கிறது.......!

இலைகளின்
"மழைக் கண்ணீர்"........!                    -*சௌந்தர்*

Feb 8, 2011

"மறந்ததை நினைக்கிறேன்"


காதல் வந்ததும்
கற்றதை மறந்தேன்.......!

பணம் வந்ததும்
உறவை மறந்தேன்........!

போதை வந்ததும்
பாதையை மறந்தேன்.......!

வசதி வந்ததும்
கடவுளை மறந்தேன்........!

தாரம் வந்ததும்
தாயை மறந்தேன்.......!

வாழ்வில் தோல்வி வந்ததும்,
மறந்ததையெல்லாம் நினைக்கிறேன்........!

மீண்டும் மீண்டும் மறக்கிறேன்......!                   -*சௌந்தர்*

Feb 4, 2011

"வெள்ளை துப்பட்டா"



மனதில் 
சலனத்தை தொடங்கி 
வைத்து விட்டு 
சமரசமும் செய்கிறது........!

அவளின் 
"வெள்ளை துப்பட்டா"........!                  -*சௌந்தர்*

"சில்லறை பாக்கி"


அழகான
கிளைகளை விரித்தப்படி
ஆயிரம் பூக்களை சுமந்தபடி
பார்வையில் பட்டு
ஓடின பேருந்தின்
வேகத்திற்கு ஈடு கொடுத்து.......!

வானத்து மேகங்கள்
வித விதமாய்
உருக்கொண்டு நகர்ந்தபடி
தக்க பயன்களை பதிவு செய்தன...!

முன்னிருக்கை குழந்தை
எக்கி,எக்கி
தன் பிஞ்சுக் கரங்களால்
என்னை தொடப் பார்த்து
தோல்வியடைந்தது.......!

பின்னிருக்கை இளஞ்ஜோடி
காதோரம் கதைபேசி
கைவிரலில் நடைபயின்று
கிறங்கி குதூகலித்தது.......!

சுவுகரியமாய்
அமர இடம் பிடித்து
ரசிக்கத்தக்க நிகழ்வுகளை
ரசிக்க இயலாமல் தடுத்தது
நடத்துனர் தர வேண்டிய
"சில்லறை பாக்கி"......!                      -*சௌந்தர்*

Feb 2, 2011

"கருகிப் போவதில்லை காதல்"


நான் மனிதன் இல்லை
அவளிடம் நான் இல்லை அதனால்
என்னை விட்டு அவள் பிரிந்தாலும்
நான் வாழ்வேன்
அவள் நினைவின் சுவடுகளோடு.......!

என் பெற்றோருக்காக,நண்பருக்காக
வாழ வேண்டுமென்ற கட்டாயம்
என் வாழ்வில் "அவளை பிரிந்து".....!

திருமணம் என்ற கட்டாயமோ,
அவள் வாழ்வில் "என்னை பிரிந்து"......!

கனவுகள் விரக்தி
எனது வாழ்வில்
அவள் நிலையை எப்படி சொல்வேன்
காயங்களும் சுகங்களே
எனது கண்ணீரும் சுகங்களே-எனினும்
இறைவனை வேண்டுகிறேன்
அவள் வாழ்.....!                                               -*சௌந்தர்*

"தபால்காரன்"


மகளின் காதலுக்கு
தடைப்போட்ட தபால்க்காரருக்கு
மனம் உறுத்துகிறது.........!?!

கையிலுள்ள தபால்களில்
எத்தனை கடிதங்கள்
"காதல்"
கடிதங்களோ என்று...........!?!        -*சௌந்தர்*

Feb 1, 2011

கஞ்சிக்கு உப்பில்லை


அம்மா..!!!
கஞ்சிக்கு உப்பில்லை-
என்று சொன்னதும்
கண்ணீர் வடித்தால்
"தாய்"..........!?!         -*சௌந்தர்*

"நிழல்1"


ஆடையணிந்தாலும்
நிர்வாணமாய்
நிழல்.........!        -*சௌந்தர்*

நிழல்


அன்பே..!!!
நிழல் கூட
அழகாத்தான் தெரிகிறது.....!

உன்
மீது வெயில்
பட்ட பின்பு.......!       -*சௌந்தர்*