Sep 19, 2011

"கனவாய் என் காதல்"

நீ
குளிக்கும் அறைக்குள்
செல்லும் போது 
வழுக்கிவிழுந்து.....!
உன் கால்களின் விரல்கள்
வீங்கி விட்டதாக அறிந்தேன்...!
....துடித்தேன்…..
புறப்பட்டேன் உன்னை காண.......! 

வழக்கமாக என் பேருந்து பயணத்தில்..
புத்தகங்களே எனக்கு துணையாக வரும்...!
இம்முறை உன் நினைவுகள்..!
நீ எப்படி வலி தாங்குவாய்...!
நீ எப்படி வலி தாங்குவாய் என
எண்ணியபோதே...!.
கண்களின் ஓரம் கண்ணிர்துளி…!.
அது கண்ணத்திற்கு வருமுன்னே துடைத்தேன்
உன் மேல் நான் எந்த அளவுக்கு
அன்பு வைத்துள்ளேன் என்று உணர்ந்த நாள் இன்று…..! 

காலையில் வந்து சேர்ந்தேன்
நீ வசிக்கும் ஊருக்கு…..!
மாலையில் வந்தேன்
உன் வீட்டிற்கு....!
என்னைப் பார்த்ததும் சிரித்தாய்.....!
வரவேற்றாய்...!

பேசினோம் நீண்ட நாட்களுக்கு பிறகு..
"டேபிளின்" ஒரு புறம் நான்
"டேபிளின்" இன்னோரு புறம் நீ….!
எந்த விரல்கள் வீங்கியது காட்டு என்றேன்
மலரினும் மெல்லிய....!
உன் பாதங்களை காட்டினாய்….!

வீக்கம் அதிகமாகதான் இருந்தது...!
ஒரு வேளை சுழுக்கு பிடித்திரும் என்றேன்..
"ஆம்" என்பது போல் தலையசைத்தாய்
சொடுக்கு எடுத்தாள் சரியாகிவிடும் என்று
சொல்லியவாறு...! உன் அனுமதி இல்லாமல்..
உன் கால்விரல் பிடித்து அழுத்தினேன்....!

சொடுக்கு சத்தத்திற்கு பதில்....!
உன் அழுகுரல் சத்தம்தான் கேட்டது
சத்தம் கேட்டு உன் அன்னை ஒடி வர...
நீ அழுது கொண்டிருக்க....!
என் கண்களும் கலங்க தொடங்கியது…!
உன் கண்களில்...!!!
தாரை தாரையாக கண்ணீர்….!
என்னாச்சு என உன் அம்மா வினவினாள்...!
அழுவதை தவிர வேறெதுவும் செய்யாமல் நீ….!
காலன் நம்மை அழைக்கும் வரை
உன் கண்களில் 
கண்ணிர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற
கற்பனை செய்திருந்த நான்......!
உன் கண்ணிரை பார்த்ததும்..
சொல்லாவண்ணம் துயர்கொண்டேன்….! 
உன் கண்ணிரைக் கண்டதுமே...!
என் கண் கலங்க....!
கட..கடவென்று சிரிக்க ஆரம்பித்தாய்...!
அந்த சிரிப்பில் தெரிந்தது
நான் அழக்கூடாது என்று நீ ஆசைப்படுவதை….!
அத்தனையும் பார்த்தபடி 
உன் அன்னை……..!       -*சௌந்தர்*

Sep 15, 2011

கணவாய் மட்டுமே நீ....!!!


நான் எதிர்பார்க்காத ஒரு நாள்...!
அலைப்பேசி அழைத்தது...!
அழைத்தது நீ என்பதால்...!
ஆர்வமாய் எடுத்தேன்...!

எப்படி "டா" இருக்க.? என்றாய்...!
வானில் பறப்பது போல் இருந்தது..!
நீ எப்படி இருகிறாய்..! என்றேன்..!
முகமெல்லாம் "பரு" இருக்கு டா என..!
"சினுங்கினாய்"....!

அந்த சினுங்களுக்காகவே...!
இன்னொரு முறை எப்படி இருக்கிறாய் என்றேன்...!
"டாய்" ய் ய ய் ய்ய் ய்..என இழுத்தாய்....!
(இன்பமே..! உந்தன் பேர் பெண்மை யோ..!)

என் "பரு" போவதற்க்கு ஒரு வழி சொல்லுடா...! என்றாய்....!
லுஸூ அது "ஆர்மோன்" பிரச்சனை தான்....!
விரைவில் பரு போய் விடும் வருத்தபடாதே..! என்றேன்..!
ஹ ஹ ஹா ஹா..என விலா எழும்பு நோகும்வரை சிரித்தாய்..!
ஏன் பா சிரிக்கிறாய் என்று கேட்டதற்கு....!

அது ஆர்மோன் இல்ல."ஹார்மோன்" என்றாய்....!
நீ எல்லாம் எப்படி....!
உண்மையைய் சொல்...!
நீ பிட் அடிச்சு தானே..கல்லூரியில் பாஸ் பண்ண என்று
சொல்லியவறே....!! சிரித்துக்கொண்டே இருந்தாய்...!!!

இந்த சிரிப்புக்காகவே
ஒவ்வொரு முறையும்
உன்னிடம் "கோமாளி" ஆகலாம் என தோன்றுகிறது.....!  -*சௌந்தர்*

Sep 14, 2011

அம்மா


கண்ணீரை
புன்னகையால் துடைத்துவிட்டு
புன்னகையை கண்ணீரால்
முத்தமிட்ட உனக்காக
உயிரை விட மேலான
உன் பாசத்திற்காக
என் இதயத்தின்
ஆழத்தில் இருந்து
கண்ணீரை பரிசளிக்கிறேன்.......!!!   -*சௌந்தர்*

Sep 12, 2011

நட்பு


கார்மேகம் போல்
இடை தொட்ட கருங்கூந்தல்....!

கன்னம் குழிவிழ சிந்தும்
இதழோர புன்னைகை........!

மெல்ல சிணுங்கும்
கொலுசொலி............!

ஒளி உமிழும்
கலங்கரை விழிகள்........!

தோற்காமல் தொடரும்
வைராக்கிய மௌனம்.........!

தலை தாழ்த்தி சங்கடமாய்
என்னை கடக்கும் அதிவேக
நிமிடங்கள்...........!

முட்களில் விழுந்தாலும்
காயப்படாமல்
பள்ளத்திலிருந்து மீண்டு
பயணிக்கும் நம்
நட்பு............!!!                  -*சௌந்தர்*

Sep 11, 2011

லஞ்சம்


என்னை மறந்துவிடு 
என்று கெஞ்சியவள் அவளுடைய 
முதல் முத்தத்தை 
என்னுடைய காதலின் 
கடைசி நிமிடத்தில் 
லஞ்சமாக எனக்கு பரிசளித்தாள்.....!!!

இப்போதும் என் கன்னத்தில் 
நிம்மதியாக உறங்கிகொண்டிருக்கிறது 
உன் முதல் முத்தம்......!!!

என் ஊனமுற்ற இதயத்தில் 
இறைந்து கொண்டிருக்கிறது 
உன் கடைசி நிமிட கெஞ்சல்கள்........!!!    -*சௌந்தர்*